ஆட்டோ, பஸ் கட்டணங்கள் குறையுமா?

பெற்றோல் விலை குறைக்கப்பட்டாலும் ஆட்டோ கட்டணம் குறைக்கப்பட மாட்டாது என ஆட்டோ சங்கங்கங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன், டீசல் விலையில் திருத்தம் செய்யப்படாமையால் பஸ் கட்டணங்கள் குறைக்கப்பட மாட்டாதென அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று(31) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

அதன் புதிய விலை 318 ரூபாவாகும்.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லிட்டரின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 385 ரூபாவாகும்.

லங்கா சுப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 340 ரூபாவாக அமைந்துள்ளது.

மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது

அதற்கமைய மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின் புதிய விலை 245 ரூபாவாகும்.

Related Articles

Latest Articles