வெதுப்பக உணவுகளை விற்பனை செய்யும் ஆட்டோவொன்று நேற்று (23) பிற்பகல் மடூல்சீமை கொக்காகல பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஆட்டோ ஓட்டுநர் படுகாயமடைந்துள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.
இல.35, அத்கம் நிவச, பசறை பகுதியை சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் குறித்த பகுதியில் வெதுப்பக உணவுகளை முச்சக்கர வண்டியில் கொண்டு சென்று விற்பனை செய்பவர் எனவும் நேற்று பிற்பகல் குருவிக்கலையில் இருந்து பிட்டமாறுவ நோக்கி பயணித்த போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக குறித்த முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி சிகிச்சைகளுக்காக மடூல்சீமை மெட்டிக்காத்தன்ன பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மடூல்சீமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தன்ராஜா டிமேஷன்
