ஆபத்தான ஒமிக்ரோன் தொற்று! இராணுவத் தளபதியின் அவசர அறிவித்தல்

முடக்கல் நிலைக்கு செல்லாதிருக்க மக்கள் பரிந்துரைக்கப்பட்ட சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என இராணுவத் தளபதி  ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

கண்டியில் இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கொவிட்-19 இன் ஆபத்தான ஒமிக்ரோன் மாறுபாட்டின் பரவலைக் கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர்.

புதிய மாறுபாடு குறித்து நிபுணர்கள் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கின்றனர். எனவே முழுமையான பகுப்பாய்வுக்குப் பின்னர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles