மலையகத்தில் ஏற்பட்டுள்ள அதிகமான மழைவீழ்ச்சி மற்றும் கடும் காற்று காரணமாக பல இயற்கை தாக்கங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்கு அருகில் உள்ள பல மரங்கள் கூரைகளில் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல வீடுகளில் விழுந்து வீடுகளை சேதமாக்கியுள்ளது. இந்நிலையில் அவ்வாறு அபாயகரமான மரங்களை அப்புறப்பட்டத தோட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மலையக தொழிலாளர் முன்னணியின் நிதிச்செயலாளர் தோட்ட நிர்வாகங்களுக்கு கடிதங்களை அனுப்பியுள்ளார்.
இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில்
” மலையக மக்கள் முன்னணியின் ஹட்டன் காரியாலயத்துக்கு பல பிரேரணைகள் அனுப்பப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலானவை மரங்களை அப்புறப்படுத்தல் தொடர்பாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.எனவே விரைவாக அபாயகரமான மரங்களை அப்புறப்படுத்த தோட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அண்மையில் பூண்டுலோயா, பத்தனை பகுதி,பதுளை,நுவரெலியா போன்ற பகுதிகள் மரம் முறிந்து விழுந்து வீடுகள் சேதமாகியுள்ளமையை அவதானிக்க முடிந்தது.
எனவே உயிர் சேதங்கள் ஏதும் ஏற்பட முன்னர் விரைவாக தோட்டப்பகுதிகளில் வீடுகளுக்கு அருகிலுள்ள அபயகரமான மரங்களை அப்புறப்படுத்த நடவடிக்கையை தோட்ட நிர்வாகங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென தோட்ட நிர்வாகங்களுக்கு மலைய தொழிலாளர் முன்னணியின் நிதிச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் கடிதங்களை அனுப்பியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
நிருபர் – நீலமேகம் பிரசாந்த்