இணையத்தளத்தில் ஆபாசக் காட்சிகள் மற்றும் நிழற்படங்களை பதிவேற்றிய ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
புறக்கோட்டை, பிலியந்தலை, பூஜாபிட்டிய, இராஜகிரிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சிலரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், சந்தேகநபர்கள் 25 முதல் 39 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பிலான விசாரணைகளை பொலிஸ் கணினி குற்றத்தடுப்பு பிரிவு முன்னெடுத்துவருகின்றது.
