ஆப்கானிஸ்தான் – குண்டூஸ் பகுதியிலுள்ள பள்ளிவாசலில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல் பலர் உடல் சிதறிப்பலியாகியுள்ளனர். தலிபான்களை இலக்கு வைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் ஐ.எஸ்.பி.கே. அமைப்பினர் இதற்கு உரிமைகோரியுள்ளதாக கூறப்படுகிறது. சம்பவத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
தலிபான்களும் ஐ.எஸ்.பி.கே அமைப்பினரும் இஸ்லாமிய ஆட்சியை ஆப்கானிஸ்தானில் நிறுவவேண்டும் என்ற பொதுக்கொள்கையோடிருந்தாலும் அரசியல் மற்றும் மத விடயங்களில் இரண்டு தரப்பினருக்கும் பாரிய முரண்பாடுகள் உள்ளன என்று கூறப்படுகிறது. ஆப்கானிலிருந்து அமெரிக்கப்படையினர் வெளியேறியதுமுதல், தலிபான்களை இலக்குவைத்து ஐ.எஸ்.பி.கே. அமைப்பினர் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.