ஆப்கான் அணியை பந்தாடி இலங்கை வெற்றி!

ரி – 20 உலகக்கிண்ண தொடரில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் இன்று நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 144 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர் 145 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
தனஞ்ச டி சில்வா ஆட்டமிழக்காது 66 ஓட்டங்களைப் பெற்றார்.

Related Articles

Latest Articles