மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மார்ச் மாதம் முதல் குறைந்தபட்ச நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என ஜனாதிபதி கட்டளை பிறப்பித்திருந்தாலும் இன்னும் சம்பள உயர்வு கிடைக்கவில்லை.
இன்று கிடைக்கும், நாளை கிடைக்கும் என தொழிற்சங்கங்கள் சமாளிப்பு அறிவிப்புகளை விடுத்தாலும், ஆயிரம் ரூபாவை வழங்கும் நிலைப்பாட்டில் பெருந்தோட்டக்கம்பனிகள் இல்லை.
ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கான திட்டமொன்று அவசியம் என முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது. அப்படியானால் ஆயிரம் ரூபா எப்போது கிடைக்கும்?
ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் தயாரென்றும், ஆனால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை ஏற்பதற்கு தயாரில்லை எனவும் தொழிற்சங்க தரப்பில் தேர்தல் காலத்தில் கருத்துகள் வெளியிடப்பட்டன.
ஆயிரம் ரூபா சம்பளத்துக்காக பெருந்தோட்டத்தொழிலாளர்கள் ஐந்தாண்டுகளாக போராடிவருகின்றனர். எனினும், அவர்களுக்கு இன்னும் உரிய தீர்வு கிடைக்கவில்லை.