ஆயுத உதவியை நிறுத்துவோம்: இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

காசாவில் ரபா பகுதியில் பாரிய தரை வழி தாக்குதலை மேற்கொள்வதற்கு இஸ்ரேல் தயாராகிவரும் நிலையில், அவ்வாறானதொரு தாக்குதல் இடம்பெற்றால் இஸ்ரேலுக்கு ஆயுத உதவி வழங்கப்படமாட்டாதென அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“ இஸ்ரேல் ரபாவிற்குள் நுழைந்தால் சில ஆயுதங்களை வழங்க அமெரிக்கா தயாரில்லை. ஆட்டிலறி எறிகணைகள் மற்றும் மேலும் சில ஆயுதங்களை வழங்கமாட்டோம்.” -எனவும் அவர் கூறியுள்ளார்.

ரபாவில் இன்னும் தரைவழி தாக்குதல் ஆரம்பமாகவில்லை எனவும், இஸ்ரேலிய படையினர் எல்லையில்தான் உள்ளனர் எனவும் அமெரிக்க ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

“ மக்கள் வசிக்கும் பகுதிக்குள் படைகள் நுழையக்கூடாது என்ற தெளிவான செய்தி இஸ்ரேல் பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளது.” – எனவும் அமெரிக்க ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, ரபாமீதான தரைவழி தாக்குதலை இஸ்ரேல் கைவிட வேண்டும் என ஆஸ்திரேலியாவும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Latest Articles