ஆறுமுகம் தொண்டமானின் நினைவாக விசேட முத்திரையும் கடித உறையும் வெளியீடு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமானின் நினைவாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட நினைவு முத்திரை மற்றும் கடித உறை என்பன இன்று (29) ஜனாதிபதி அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.                                         

வெகுசன ஊடகம் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவினால் நினைவு முத்திரையும் கடித உறையும் ஜனாதிபதிக்கு வழங்கி வைக்கப்பட்டன.           

இதன்போது, பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் மற்றும் ஆறுமுகன் தொண்டமானின் மனைவி திருமதி.ராஜலட்சுமி தொண்டமான் ஆகியோருக்கு நினைவு முத்திரையும் கடித உறையும் வழங்கப்பட்டது.                       

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான், அமைச்சர்களான நிமல் சிரிபால டி சில்வா ,கெஹெலிய ரம்புக்வெல்ல,டக்ளஸ் தேவானந்தா, மஹிந்த அமரவீர,நஸீர் அஹமட்,மனுஷ நாணயக்கார, பாராளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன,மஹிந்தானந்த அலுத்கமகே,சீ.பி ரத்னாயக்க, தபால் மா அதிபர் எஸ். ஆர். டபிள்யூ. எம். ஆர். பி சத்குமார மற்றும் ஆறுமுகன் தொண்டமானின் குடும்ப உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles