இலங்கைக்கு வழங்கப்பட்ட 500 மில்லியன் யுவான் மனிதாபிமான உதவியின் கீழ் ஒரு தொகை அரிசி எதிர்வரும் வாரம் நாட்டை வந்தடையவுள்ளது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியை கட்டுப்படுத்தும் வகையில் 500 மில்லியன் யுவான் பெறுமதியான பொருட்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்குவதாக சீனா அண்மையில் அறிவித்திருந்தது.
இதன்படி குறித்த மனிதாபிமான உதவியின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்ட முதலாவது தொகை அரிசி எதிர்வரும் 25 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும் ஆறு கட்டங்களின் அடிப்படையில் குறித்த அரிசி நாட்டை வந்தடையவுள்ளதுடன் மேலும் இரண்டாவது தொகை எதிர்வரும் 30 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இரண்டாம் கட்ட அரிசித் தொகை நாட்டின் பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டத்திற்கு பயன்படுத்தப்படவுள்ளதாக சீனத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.










