ஆறு குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழப்பு

கொழும்பு காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் பிறந்த ஆறு குழந்தைகளில் ஒரு குழந்தை இன்று (18) காலை உயிரிழந்துள்ளது.

12 வருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்த ராகமை, வெயாங்கொட பகுதியை சேர்ந்த 37 வயதான பெண்ணொருவர், ஒரே பிரசவத்தில் ஆறு ஆண் குழந்தைகளை பிரசவித்திருந்தார்.

குறித்த வைத்தியசாலையின் சிசுக்களுக்கான சிகிச்சை பிரிவில் நிலவும் இடப்பற்றாக்குறை காரணமாக ஒரு குழந்தை, சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தது. அந்த குழந்தையே உயிரிழந்துள்ளது.

Related Articles

Latest Articles