ஹப்புத்தளை பிரதேச சபையின் உப தலைவர் ஆளும் கட்சியிலிருந்து விலகி, சபை சுயாதீனமாக முடிவெடுத்துள்ளார்.
சபைத் தலைவர் கே.பி. கண்ணா கந்தசாமி தலைமையில் சபை அமர்வு நேற்று (15) ஹப்புத்தளை பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.
இவ் அமர்வில் கலந்து கொண்ட சபையின் உப தலைவர் நிமால் அமரசிரி சபை அமர்வில் நீண்ட உரையொன்றை ஆற்றிவிட்டு, சபை அமர்வில் சுயாதீனமாக இயங்குவதாகக் கூறி, தனியாக அமர்ந்து செயற்பட்டார்.
அவர் அங்கு உரையாற்றும் போது,“ஹப்புத்தளை பிரதேச சபையினால், எமது மக்களுக்கு பூரணமாக சேவையாற்ற முடியவில்லை. அதற்கான வாய்ப்புக்கள் எனக்குக் கிடைப்பதில்லை.
எனக்கு வாக்களித்து, இப்பிரதேச சபைக்கு என்னை அனுப்பிய மக்களுக்கு எப்பணியையும் செய்ய முடியவில்லை. அதனாலேயே, சபையில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்தேன்” என்று கூறி, ஆளும் கட்சியிலிருந்து விலகி, சுயாதீனமாக செயற்பட ஆரம்பித்தார். ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியிலிருந்தே, சபையின் உப தலைவர் விலகியமை குறிப்பிடத்தக்கது.
எம். செல்வராஜா, பதுளை