ஆட்டோவில் நாடாளுமன்றம் சென்ற என்பிபி எம்.பி.!

சாதாரண மக்களைப் போல் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் ஓட்டோவில் நாடாளுமன்ற அமர்வுக்குச் சென்றார்.

வவுனியாவில் இருந்து பஸ்ஸில் கொழும்பு சென்ற அவர், அங்கு தனது விடுதியில் இருந்து நேற்று வியாழக்கிழமை காலை ஓட்டோ ஒன்றை வாடகைக்கு அமர்த்தி அதில் நாடாளுமன்றம் சென்று சபை அமர்வில் கலந்துகொண்டார்.

ஆடம்பரமின்றி மக்களைப் போல் மக்களது துன்பங்களை உணர்ந்தவனாக இவ்வாறு நாடாளுமன்றம் சென்றதாக அவர் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles