ஆஸ்திரேலியா, கன்பரா தேசிய மிருககாட்சி சாலைக்கு இணைந்ததாக உள்ள ஹோட்டலொன்றில் 29 வயது பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி ஹோட்டலில் வேலை செய்த ஜுட் விஜேசிங்க (வயது – 29) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண்ணும் அதே ஹோட்டலில் பணிபுரிபவர் என தெரியவருகின்றது.
பூட்டானை சேர்ந்த குறித்த பெண் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை. விசாரணைகள் இடம்பெற்றுவருவதால் காவல்துறை தகவல் வெளியிட மறுத்துள்ளது.
டிசம்பர் 18 ஆம் திகதியே குறித்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர் தன்னைத்தானே காயப்படுத்திக்கொண்டுள்ளார் என சந்தேகிக்கப்படுகின்றது.
பொலிஸ் பாதுகாப்பில் அவர் தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றார்.