ஆஸ்திரேலிய தின நிகழ்வில் பங்கேற்ற சஜித்!
ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு இலங்கையிலுள்ள அந்நாட்டு தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று மாலை இடம்பெற்ற வைபவத்தில் இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டார்.
இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் Matthew Duckworth மற்றும் அவரது பாரியார் Tanya Duckworth ஆகியோரின் கௌரவ அழைப்பை ஏற்றே அவர் இந்நிகழ்வில் பங்கேற்றார்.
பல நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட தரப்பினர் இங்கு கூடியிருந்தனர்.
