இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 3 விக்கட்டுக்களால் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியது.
மென்செஸ்டரில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 302 ஓட்டங்களைக் குவித்தது.
ஜோனி பேர்ஸ்டோ சதமடித்து இங்கிலாந்து ஓட்ட எண்ணிக்கையை அதிகரிக்க வைத்தார். பில்லிங், ஹோக்ஸ் ஆகியோர் அரைத்தசமடித்தனர்.
பின்னர் 303 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய ஆஸ்திரேலிய அணி, 73 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து திண்டாடியது.
அதன்பின்னர் ஜோடி சேர்ந்த அலக்ஸ் கிரே மற்றும், கிளேன் மெக்ஸ்வெல் ஆகியோர் சதங்களை விளாசி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச்சென்றனர்.
49.4 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து ஆஸி.அணி வெற்றியிலக்கை கடந்தது.
ஆட்ட மற்றும் தொடர் ஆட்டநாயகனாக கிளேன் மெக்ஸ்வெல் தெரிவானார்.