இங்கிலாந்து, அயர்லாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது கிரிக்கெட் போட்டி இன்று (01) நடைபெறவுள்ளது.
இலங்கை நேரப்படி மாலை 6.30 மணிக்கு சவுதம்டனில் குறித்த போட்டி ஆரம்பமாகும்.
அயர்லாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி எளிதில் வெற்றிருந்தது.
இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 44.4 ஓவர்களில் 172 ஓட்டங்களுக்குள் சுருண்டது. அதிகபட்சமாக அறிமுக வீரர் கேம்பெர் 59 ஓட்டங்களை எடுத்தார்.
இங்கிலாந்து அணி 27.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 174 ஓட்டங்களை சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி கண்டது. டேவிட் வில்லி ஆட்டநாயகன் விருது பெற்றார்.