இடைக்கால அரசுக்கு பிரதான எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

” இடைக்கால அரசில் அங்கம் வகிக்கமாட்டோம், அதற்கு ஆதரவும் வழங்கமாட்டோம்.” – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

அரசுக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை சமாளிப்பதற்கும், உள்ளக மோதல்களை முடிவுக்கு கொண்டுவரவும், மக்களை ஏமாற்றுவதற்காகவுமே இந்த நகர்வு முன்னெடுக்கப்படுகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

இடைக்கால அரசை அமைப்பதற்கு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் இணக்கம் தெரிவித்துள்ளனர் என்று விமல் வீரவன்ச நேற்று அறிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே இடைக்கால அரசுக்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
ஜே.வி.பி. மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இடைக்கால அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளன.

Related Articles

Latest Articles