‘இடைக்கால அரசு ஏமாற்று வித்தை’ – சஜித் சுட்டிக்காட்டு

” இடைக்கால அரசென்பது மற்றுமொரு ஏமாற்று நடவடிக்கையாகும்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” கள்வர்கள் அங்கம் வகிக்கும் தூய்மையற்ற இடைக்கால அரசில் ஐக்கிய மக்கள் சக்தி அங்கம் வகிக்காது. நான் தலைவராக இருக்கும்வரை அதற்கான அனுமதியை வழங்கமாட்டேன்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும்.  மக்களின் கோரிக்கையும் இதுவாகவே உள்ளது. கள்வர்களுடன் இணைந்து ஆட்சி அமைத்தால், எப்படி கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை கொண்டுவருவது? 2015 இல் ஏற்பட்ட நிலைதான் மீண்டும் ஏற்படும்.” – என்றார்.

Related Articles

Latest Articles