மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இடைக்கால கொடுப்பனவாக 5 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்ற யோசனையை நாம் வரவேற்கின்றோம் – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்கப்பட வேண்டுமென தீர்மானம் எட்டப்பட்டிருந்தாலும் நீதிமன்ற நடவடிக்கை காரணமாக அது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
எனவே, தோட்ட தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா கிடைக்கும்வரை இடைக்கால கொடுப்பனவாக 5 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இதொகா தலைவர் முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மனோ கணேசன் ,
“ நல்ல யோசனை, ஜனாதிபதியிடம் இது தொடர்பில் வலியுறுத்தி கொடுப்பனவை பெற்றுக்கொடுக்குமாறு செந்தில் தொண்டமானிடம் கூறுகின்றோம். இத்தகைய ஆக்கப்பூர்வமான சிந்தனையை வரவேற்கின்றோம்.” – என்றார்.