இணைந்தன இரு இதயங்கள் – நியூசிலாந்து முன்னாள் பிரதமருக்கு டும்…டும்…டும்

நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தனது காதலனை இன்று கரம்பிடித்துள்ளார். புது மண தம்பதியினருக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டனுக்கும் (43) அவரது நீண்ட நாள் காதலரான க்லார்கே கேபோர்டுக்கும் (47) கடந்த 2019ம் ஆண்டில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

எனினும், கொரோனா பரவல் காரணமாக திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. 2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திருமணம் செய்துக் கொள்ள இருந்தனர். கொரோனா தொற்று காரணமாக மீண்டும் திருமணம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், ஜெசிந்தா ஆர்டனுக்கும் க்லார்கே கேபோர்டுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது.

மணமக்கள் இருவருக்கும் உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Latest Articles