நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு உடனடி தீர்வைக் கோரியும், மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காணுமாறு கோரியும் இலங்கை இணைய ஊடகவியலாளர்கள் சங்கம் இன்று (24) எதிர்ப்புப் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. இணையதளங்களில் டிஜிட்டல் கார்ட்டூன்களை காட்சிப்படுத்தி இந்த போராட்டம் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
‘நிலையான அரசியல் தீர்வு வேண்டும்’ என்ற தொனிப்பொருளில் தமது போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை இணைய ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரெடி கமகே தெரிவித்தார்.