இதன்பிறகே எங்களின் திருமணம் நடக்கும் ! விக்னேஷ் சிவன் ரசிகர்களுக்கு கொடுத்த அப்டேட்..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காதல் ஜோடிகளாக திகழ்ந்து வருபவர்கள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா.

இந்த பிரபலமான காதல் ஜோடிகள் எப்போது திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இதனிடையே இவர்கள் இருவரும் சேர்ந்து வெளியிட்டுள்ள திரைப்படம் ராக்கி, சமீபத்தில் வெளியான இப்படம் சிறந்த விமர்சங்களை பெற்று வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்ஸ்டாவில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்த விக்னேஷ் சிவனிடம் ரசிகர் ஒருவர் ஒருவர் உங்கள் திருமணம் எப்போது என கேள்வி எழுப்பினார்.

அதற்கு அவர் கூறியதாவது “எங்களுக்குள் காதல் தற்போது நன்றாக சென்றுகொண்டிருக்கிறது, மேலும் எங்களுக்கென்று தனி குறிக்கோள்கள் இருக்கின்றது. அதை கூடிய விரைவில் அடைந்துவிட்டு திருமணம் செய்துகொள்வோம்.

மேலும் சினிமா நட்சத்திரங்களின் திருமணம் என்றால் அதிக செலவாகும், அதையும் சம்பாதித்து கொரோனா தொற்றும் படிப்படியாக குறைந்துவிட்டால் விரைவில் திருமணம் செய்துகொள்வோம்” என கூறியுள்ளார்.

Related Articles

Latest Articles