இது தேர்தல் கூட்டணி அல்ல – மனோ

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு,

” 21 ஆம் திகதியை நோக்கி, இன்றைய தினங்களில், கட்சி தலைவர்கள் கையெழுத்திடக்கூடிய எமது பொது ஆவணம் பற்றி கட்சிகள் மத்தியில் கலந்துரையாடல் நடைபெறுகின்றது.

உத்தேசமாக தமிழ் முற்போக்கு கூட்டணி கையெழுத்திடும் அதேவேளை, கூட்டணியின் பங்காளி கட்சி தலைவர்களும், தனித்தனியேயும் கையெழுத்திட வேண்டும் எனவும் நான் வலியுறுத்தியுள்ளேன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பும், கூட்டாகவும், பங்காளி கட்சி தலைவர்கள் தனித்தனியாகவும் கையெழுத்து இடுவார்கள் எனவும் நான் நம்புகிறேன்.

அதேவேளை முஸ்லிம் மக்கள் சார்பாக , ஸ்ரீலமுகா கட்சிக்கு மேலதிகமாக, அஇமகா கட்சியும் உள்வாங்கப்பட வேண்டும் என்ற முன்மொழிவை அனைத்து கட்சி தலைவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். ஆகவே அதுவும் நிகழும் என நம்புகிறேன்.

அதேவேளை இது எதுவும் தேர்தல் கூட்டும் அல்ல என்பதையும் நான் வலியுறுத்துகிறேன்.

இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் சார்பாக நாம் அனைவரும் மிகுந்த விட்டுக்கொடுப்புடன் செயற்படுகிறோம். இதுவே எம்மை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் என நான் நம்புகிறேன். ” – என்றுள்ளது.

Related Articles

Latest Articles