நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவால் முன்வைக்கப்பட்டுள்ள பாதீட்டை புரட்சிகரமான வரவு- செலவுத் திட்டமென பாராட்டியுள்ளார் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பாதீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு பாராட்டினார்.
” இலங்கையில் சுதந்திரத்துக்கு பிறகு முன்வைக்கப்பட்டுள்ள புரட்சிகரமான வரவு – செலவுத் திட்டமே இது. கிராமிய பொருளாதாரம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளன. நடைமுறைக்கு சாத்தியமான விடயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்தவகையில் பிரதமரின் அனுபவங்களையும் உள்வாங்கி, சிறப்பானதொரு பாதீட்டையே நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச முன்வைத்துள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் மட்டும் 16 உற்பத்தி கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல யாழில் 6 நகரங்களை தரமுயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.”- என்றார்.
