மனோ கணேசன் எவ்வாறு 2010 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் கண்டி மாவட்டதில் தோல்வி அடைந்து ஜனநாயக மக்கள்;பட் முன்னணியின் தலைவராக செயற்பட்டாறோ அவ்வாறுதான் இ.தொ.காவும் செயற்படுகிறது என இ.தொ.காவின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் ரகு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறியுள்ளவை வருமாறு,
“ ஜனநாயக மக்கள் முன்னணிக்கு இ.தொ.கா மீதும் தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன் மீதும் திடீர் காதல் ஏற்பட்டுள்ளதை எண்ணி ஆச்சிரியமைடைகிறேன்.
தமிழ் முற்போக்கு கூட்டணியில் இருந்து வெளியேறிய பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார், அக்கட்சி ஒரு கொள்கையற்ற கட்சி என்பதால் தான் வெளியேறினேன் என தெரிவித்ததற்கு சிறந்த உதாரணம் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு ஆளும் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்த வேலுகுமார் தான்.
இ.தொ.கா சம்பளம் பெற்றுக் கொடுக்கவில்லை, இ.தொ.கா தான் சம்பளம் பெற்றுக் கொடுக்க வேண்டும் என வெட்கம் இல்லாமல் சொல்லும் ஜனநாயக மக்கள் முன்னணியின் உறுப்பினர் சரண் ஜீவன் எதற்காக கட்சி நடத்த வேண்டும், எதற்காக அரசியல் நடத்தி மக்களின் வாக்குகளை சூறையாட வேண்டும்?
மக்களின் வாக்குகளை பெற்றுக் கொண்டு மக்களுக்கு எதுவும் செய்யாமல் அரசியல் அறிக்கைகளில் பொழப்பு நடத்திக் கொண்டிருக்கின்றனர். இ.தொ.கா தான் சம்பளம் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று வெட்கம் இன்றி சொல்லுகிறீர்களே?
இ.தொ.கா தலைவரின் விடா முயற்சியாலும், அவருடைய வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்ட தொடர் போராட்டங்களினாலும் தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் எங்களால் பெற்று கொடுக்கப்பட்டது.
ஆனால் 10 பைசா சம்பளம் கூட பெற்றுக் கொடுக்காமல் சந்தா மட்டும் வாங்கி கொண்டிருக்கும் வேலுகுமாரும் ஜனநாயக மக்கள் முன்னணியும் இ.தொ.காவால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் உள்ளனர்.
வேலுகுமாரின் ஆடான கண்டி மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சரண் ஜீவன் , மலையக மக்களின் தொழிற்சங்க பிரச்சினை, சம்பள பிரச்சினை என எதற்கும் குரல் கொடுக்காத நீங்கள், தற்போது இ.தொ கா தலைவர் நியமிக்கப்பட்டு 2 வருடங்கள் கடந்த பின்னர், திடீரென கோமாவில் இருந்து எழுந்து வந்தவர் போல் அறிக்கை விடுகிறீர்கள் .
உங்களை போல் ,2 வருடம் கடந்த விடயங்களுக்கு 2 வருடம் கழித்து அறிக்கைகள் விடுவது, உங்களுடைய கட்சியின் வேகத்தையும் சிந்தனைகளையும் பார்க்கும் போது கேலி கூத்தாக உள்ளது.
அறிக்கை மாத்திரம் விட்டிகொண்டிருக்கும் தாங்களுடைய குருநாதர் வேலுமாருக்கும் அதை கூட சரியா செய்ய தெரியவில்லை என்பது அவதானிக்க கூடியதாகவுள்ளது.
வேலுகுமார் நரி எந்த ஆடை வைத்து அறிக்கை கொடுத்தாலும் தொடர்ந்தும் வேலுகுமாருக்கு எதிராகவே இ.தொ.காவால் பதிலடி வழங்கப்படும் எனவும் ரகு தெரிவித்துள்ளார்.










