“பசறை நகரில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நாளை போராட்டம் நடத்த போவதாக தெரியவருகின்றது. போராட்டம் நடத்தி என்ன செய்தாலும் பதுளை மக்கள் உங்களை நிராகரித்துவிட்டார்கள்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளர் லெட்சுமணன் சஞ்சய் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
“ 2020 இல் நடந்த தேர்தலில் தமது எண்ணம் என்னவென்பதை மக்கள் வெளிப்படுத்திவிட்டார்கள். தாங்கள்தான் பெரிய கட்சி என்றவர்களால் வெற்றிபெறமுடியாமல்போனது. இனியும் உங்களால் வெற்றி பெற முடியாது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கொழும்பு புகையிரத நிலையத்துக்கு முன்னால் போராட்டம் நடத்தியுள்ளது. அந்த போராட்டம் ஆனது தோட்ட கம்பெனிகளின் கவனத்தை ஈர்க்க வில்லை.மாறாக அங்கு வந்த சுற்றுலா பயணிகளின் கவனத்தை தான் ஈர்த்துள்ளது.
போராட்டம் செய்ய வேண்டும் கொழும்பில் அல்ல, இப் போராட்டம் தோட்டத்தில் நடத்த வேண்டும். உங்களால் போராட்டம் செய்ய தெரியவில்லை என்றால் எங்களிடம் வாருங்கள் போராட்டம் எப்படி செய்வது என்று சொல்லி தருகின்றோம். அது மட்டும் அல்லாமல் இனியும் பதுளை மக்களை முட்டாளாக்க நினைத்தால் அது நீங்கள் உங்களை முட்டாளாக்கி கொள்வதற்கு சமன்.” – என்றுள்ளது.
ராமு தனராஜா
