நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவராக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான நியமன கடிதம் ஜனாதிபதியால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவராக செயற்பட்ட எஸ்.பி. திஸாநாயக்கவுக்கு அண்மையில் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவி கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
