இதொகா எம்மை சீண்டினால் பதிலடி கொடுக்க தயார்! மனோ அணி கொதிப்பு!!

” இயலாமையினால்தான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணியை சீண்டுகின்றது.” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரச்சார செயலாளர் பரணிதரன் முருகேசு தெரிவித்துள்ளார்.

ஜனநாயக மக்கள் முன்னணியை விமர்சித்து, இதொகா விடுத்துள்ள அறிக்கை தொடர்பில், பரணிதரன் முருகேசு மேலும் கூறியவை வருமாறு,

” நமது தலைவர் மனோ கணேசன் மிகத்தெளிவாக, இரண்டு கைகளும் தட்டினால்தான் சப்தம் வரும். எதிரணியில் இருந்து நாம் பணி செய்கிறோம். ஆளும்கட்சியில் இருந்து நீங்கள் பணி செய்யுங்கள். முரண்பாடு தேவையில்லை. மாத்தளை, இரத்தினபுரி தோட்டங்களுக்கு இதொகா அமைச்சர் போனதை நாம் பாராட்டுகிறோம். ஆனால், அதனால் பிரச்சினை முடியவில்லை. முடியாததால்தானே மீண்டும், மீண்டும் தாக்குதல் சம்பவங்கள் நடக்கின்றன?

பாராளுமன்றத்தில் நாம் குரல் எழுப்பிய பிறகுதான் பெயரவிலாவது மாத்தளை துணை முகாமையாளர் கைது செய்யப்பட்டார், என்று கூறினார்.
மேலும், நமது மக்கள் பிரச்சினை தொடர்பில், நாம் அரசுக்கு வெளியிலிருந்தபடி,  பொலிசாரின், அமைச்சரின், ஜனாதிபதியின், பாராளுமன்றத்தின், நாட்டின், நேரடி கவனத்துக்கு கொண்டு வந்து அழுத்தம்  கொடுக்கிறோம். நீங்கள் அரசுக்கு உள்ளே இருந்தபடி,  அழுத்தம் கொடுங்கள், என்றும் பகிரங்கமாக சொல்லிய பிறகும்கூட, இதொகாவுக்கு அரசியல் புரியவில்லை. அரசுக்கு உள்ளே இருந்து அழுத்தம் கொடுப்பதைவிட அவர்களுக்கு எங்களை அடித்து அரசியல் செய்ய ஆசை.

அந்த கட்சியில் இருப்பதாக சொல்லப்படும் இளைஞர் அணி என்ற பெயரை பயன்படுத்தி எங்கள் தலைவரை மோசமாக விமர்சித்தார்கள். இந்நிலையில் எமது சமூக ஊடக அணி இதொகாவை திருப்பி அடித்தது. இயலாமை காரணமாக இதொகா இனியும் இதை தொடருமானால், நாமும் பதிலடி தருவோம்.

இதொகாவின் பிரச்சினை எங்களுக்கு புரிகிறது. அங்கே இருந்து என்ன செய்தாலும், எதுவும் காத்திரமாக நடப்பதில்லை. எயார்போர்ட்டும் இல்லை. ஹார்பரும் இல்லை. பிளேனும் இல்லை. கப்பலும் இல்லை. இருந்த பஸ்சும் இலை. காணியும் இல்லை. வீடும் இல்லை. ரோடும் இல்லை. இதுதான் இயலாமை. இதற்காக எங்களை திட்டி பேசுவதால், ஆகப்போவதும் எதுவும் இல்லை.

அதனால்தான் எங்கள் தலைவர் மனோ கணேசன், ஒருவர் காலை ஒருவர் இழுக்காமல், இருக்கும் இடத்தில் இருந்தபடி, நாம் இருசாராரும் ஒரு புரிந்துணர்வுடன் செயற்படுவோம் என்று சொன்னார். அதை புரிந்துக்கொள்ளும் பக்குவமும் இதொகாவுக்கு இல்லை.

இந்நாடு முழுக்க தமிழ் மக்கள் துன்புறும் போதெல்லாம் குரல் கொடுத்து, நேரடியாக களத்தில் இறங்கும், ஒருநாளும் விலைபோகாத, முதுகெலும்புள்ள தமிழ் அரசியல் தலைவர் மனோ கணேசன் என்பது நாடறிந்த சங்கதி. “அறிக்கை அரசியல் செய்கிறார்”, களத்திற்கு போவதில்லை”, “முதுகெலும்பு இல்லை” என மறைமுகமாக எங்கள் தலைவர் மனோ கணேசனை குறித்து அநாகரீகமாக கருத்து கூற இதொகாவுக்கு உண்மையில் மனசாட்சி இருக்கிறதா? என கேட்க விரும்புகிறேன். எங்கள் தலைவரின் தனிப்பட்ட நண்பர் மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் ஆத்மா, இந்த சிறுவர்களை மன்னிக்குமா? எனவும் கேட்க விரும்புகிறேன்.

இரண்டே இரண்டு தோட்டங்களுக்கு சென்று வந்து விட்டு, அதிலும் அதனால் எதுவும் நடக்க வில்லை என்ற நிலையிலும், இந்த இதொகாவினர் நடத்தும் அலப்பறை தாங்க முடியவில்லை. அப்படியும்கூட நாம் அதை பெருந்தன்மையாக பாராட்டி, எங்கள் வேலையை நாம் செய்கிறோம், உங்கள் வேலையை நீங்கள் செய்யுங்கள் என்றுதான் நாம் கூறுகிறோம்.

ராஜப்பக்ச கொலைக்கார அரசில் ஒருபோதும் அங்கம் வகிக்காத, எமது மக்கள் கொல்லப்பட்டு, கடத்தப்பட்ட போது களத்தில் நின்று உயிர் அச்சுறுத்தலுக்கும் மத்தியில் நேரடியாக போராடிய, ஞானசாரருடன் நேரடியாக மோதிய, எமது இனம் இழிப்பெயரால் அழைக்கப்பட்ட போது நேரடியாக பொங்கி எழுந்த, நாடாளுமன்றத்தில் நேரடியாக தொடர் விவாதம் நடத்துகின்ற, தேசிய, சர்வதேசிய அரங்குகளில் எமது அந்தஸ்தை நேரடியாக உறுதிப்படுத்துகின்ற, ஈழத்தமிழ் சகோதரர்களுடன், முஸ்லிம் சகோதரர்களுடன் தோழமையுடன் நேரடியாக களத்தில் நிற்கின்ற ஒரு தலைவரை கொண்ட எமது கட்சியின் மீது, கூட்டணியின் மீது சிறுபிள்ளைதனமான விமர்சனங்களை முன்வைக்காமல், ஓரமாக ஒதுங்கி போய், விளையாடும்படி இதொகாவிடம் கூறி வைக்கிறோம்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles