இந்தியாவின் அனுமதி இல்லாமல் இலங்கை அரசாங்கத்தால் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை மாற்றமுடியாது என்று தமிழ் முற்போக்கு கூட்டணி நேற்று (16) அறிவித்தது.
ஹட்டனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அரசியலமைப்பின் 13 மற்றும் 19 ஆவது திருத்தச்சட்டங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே கூட்டணியின் பிரதித் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” அரசியலமைப்பின் 13 மற்றும் 19 ஆவது திருத்தச்சட்டங்கள் இந்த நாட்டுக்கு அவசியம். அவற்றை முழுமையாக நீக்குவதற்கு நாம் கடும் எதிர்ப்பை வெளியிடுகின்றோம்.
13ஆவது திருத்தச்சட்டம் இந்த நாட்டுக்கு அவசியம் என்பதை இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளில் 1987 இல் ஏற்றுக்கொண்டன. ஜே.ஆர். ஜயவர்தன, ராஜீவ் காந்தி இணைந்தே அதனை நடைமுறைப்படுத்து
எனவே, இந்த சட்டத்தை மாற்றுவதாக இருந்தால் இந்தியாவின் அனுமதி இல்லாமல் அதனை செய்யமுடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆகவே, 13 விடயத்தை இந்தியா கவனத்துக்கொள்ளும். நாமும் அதற்கு ஆதரவாக நிற்போம்.
19 ஆவது திருத்தச்சட்டத்தை இந்த அரசாங்கத்தால் மாற்றமுடியும். நல்லவிதத்தில் மாற்றியமைத்தால் ஆதரவு வழங்கப்படும். முழுமையாக இல்லாதொழிக்க ஆதரவு வழங்கப்படாது.” – என்றார்.