கனடாவில் இந்திய எதிர்ப்பு சக்திகளின் செயல்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், உயர் ஆணையர் கேமரூன் மேக்கே, ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கம் இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை ஆதரிக்கிறது என்று கூறினார்.
“இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை கனடா ஆதரிக்கிறது,” என்று மேக்கே குறிப்பிட்டார்.
கனடாவில் அனைத்து நம்பிக்கைகளும் வரவேற்கப்படுகின்றன, நாங்கள் அனைத்து மதத்தினரையும் நேசிக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய தலைநகரில் உள்ள குருத்வாரா பங்களா சாஹிப்பைப் பார்வையிட்ட தூதரிடம், இந்தியாவில் தடைசெய்யப்பட்ட காலிஸ்தானி அமைப்பைச் சமாளிக்க கனேடிய அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து கேட்கப்பட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.