இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா

கேரளா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த நவம்பர் மாதத்தில் 479 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இந்த மாதத்தின் முதல் எட்டு நாட்களில் மட்டும் 825 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்தியாவில் ஒட்டுமொத்தமாக கொரோனா மூலம் பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் கொரோனா மூலம் ஒருவர் உயிரிழந்த நிலையில், இந்த மாதத்தில் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு கொண்டவர்கள் உயிரிழப்பது மிகவும் அரிதாகி இருக்கும் நிலையில், பாதிப்பின் தீவிரமும் மிகவும் குறைவான நிலையிலேயே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles