இந்தியாவை வீழ்த்துமா ஆஸ்திரேலியா? இன்று பலப்பரீட்சை

சுப்பர் – 8 சுற்றில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர்8 சுற்று இன்றுடன் நிறைவடைகிறது.

குரூப் 1இல் இடம் பெற்றுள்ள அணிகள் தங்களது கடைசி லீக்கில் மோதுகின்றன.
ஆப்கானிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதன் மூலம் இந்த பிரிவு உயிரோட்டமாக மாறியிருக்கிறது.

அதாவது 4 அணிகளுக்கும் அரைஇறுதிக்கான கதவு திறந்து இருப்பதால் ரன்ரேட் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

செயின்ட் லூசியாவில இலங்கை நேரப்படி இன்று (திங்கட்கிழமை) இரவு 8 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

இதே பிரிவில் மற்றொரு ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்- பங்களாதேஷ் அணிகள் கிங்ஸ்டவுனில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டம் உள்ளூர் நேரப்படி இரவில் தொடங்கினாலும் இலங்கை நேரப்படி மறுநாள் (செவ்வாய்கிழமை) காலை 6 மணிக்கே தெரியும்.

இனி ஒவ்வொரு அணிக்கும் அரைஇறுதி வாய்ப்பு எப்படி உள்ளது என்பதை பார்க்கலாம்.

இந்தியாவுக்கு…

தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போடும் இந்திய அணி 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ரன்ரேட்டிலும் திடமான நிலையில் (ரன்ரேட் ூ2.425) இருக்கிறது.

கடைசி லீக்கில் ஆஸ்திரேலியாவை தெறிக்கவிட்டால் சிக்கலின்றி கம்பீரமாக அரைஇறுதிக்குள் நுழையும். சறுக்கினாலும் கூட அரைஇறுதிக்கு தகுதி பெற முடியும். ஆனால் மிக மோசமாக தோற்று ரன்ரேட் குறைந்து விடக்கூடாது.

உதாரணமாக ஆஸ்திரேலியா 41 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி, ஆப்கானிஸ்தான் அணி 83 ரன்னுக்கு மேல் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வென்றால் இந்தியாவின் ரன்ரேட் 3-வது இடத்துக்கு சரிந்து போட்டியை விட்டு வெளியேற நேரிடும்.

ஆஸ்திரேலியாவுக்கு…

ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை இந்தியாவை கட்டாயம் தோற்கடித்தாக வேண்டும். அதே சமயம் ஆப்கானிஸ்தானை, வங்காளதேச அணி வீழ்த்த வேண்டும். இவ்வாறு நடந்தால் ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் தலா 4 புள்ளிகளுடன் அரைஇறுதியை எட்டும். ரன்ரேட் பிரச்சினை எழாது.

ஆனால் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று, கடைசி லீக்கில் ஆப்கானிஸ்தானும் வாகை சூடினால் அப்போது இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் தலா 4 புள்ளிகளுடன் சமநிலையை அடையும். அப்போது ரன்ரேட் அடிப்படையில் இரு அணிகள் அரைஇறுதிக்கு தேர்வாகும். எனவே ஆஸ்திரேலியா ரன்ரேட்டை மனதில் வைத்தே விளையாடும்.

ஆப்கானிஸ்தானுக்கு….

ஆஸ்திரேலியாவுக்கு ‘ஆப்பு’ வைத்ததன் மூலம் அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்கும் ஆப்கானிஸ்தான் அணி சூப்பர்8 சுற்றின் இறுதி லீக்கில் வங்காளதேசத்தை வென்றாக வேண்டும். அதே சமயம் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும். இப்படி முடிவுகள் அமையும் போது இந்தியாவுடன் ஆப்கானிஸ்தான் ரன்ரேட் தேவையின்றி முதல்முறையாக அரைஇறுதிக்குள் கால்பதிக்கும்.

மாறாக ஆஸ்திரேலிய அணி இந்தியாவை தோற்கடித்தால் ஆப்கானிஸ்தான் பெரிய வித்தியாசத்தில் வங்காளதேச அணியை வதைக்க வேண்டும். உதாரணமாக ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை ஒரு ரன் வித்தியாசத்தில் வென்றால், ஆப்கானிஸ்தான் அணி குறைந்தது 36 ரன் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை முடக்கியாக வேண்டும்.

2-வது பேட்டிங்கில் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுடன் கடைசி பந்தில் இலக்கை ‘சேசிங்’ செய்தால், ஆப்கானிஸ்தான், எதிரணி 160 ரன் எடுக்கும் போது அந்த இலக்கை 15.4 ஓவருக்குள் விரட்டிப்பிடிக்க வேண்டும்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles