இந்தியாவுடன் 10 ஆண்டுக்கான பாதுகாப்பு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்தது.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட்டே ஹெக்சேத் உடன் சமீபத்தில் தொலைபேசியில் கலந்துரையாடினார்.
இதன்போது இந்தியா – அமெரிக்கா இடையே, 10 ஆண்டுக்கான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருவரும் சம்மதம் தெரிவித்தனர்.
இரு நாட்டு அமைச்சர்களின் கலந்துரையாடல் குறித்து பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“இரு நாட்டு ராணுவ அமைச்சர்களும் அடுத்த சில மாதங்களில் நேரடி சந்திப்பு நடத்த உள்ளனர்.
தெற்கு ஆசியாவில், அமெரிக்காவின் முதன்மையான ராணுவ கூட்டாளி இந்தியா என அமைச்சர் ஹெக்சேத் கூறினார்.
இந்தியாவுக்கான அமெரிக்காவின் ராணுவ தளவாட விற்பனை, ராணுவ தொழில் ஒத்துழைப்பின் கட்டாய தேவை குறித்து விவாதிக்கப்பட்டது.” – என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.