இந்தியா – பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

ரி – 20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதவுள்ளன.

9-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது.இதில் பங்கேற்றுள்ள 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் தலா ஒரு முறை மோதுகின்றன.

லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் 19வது லீக் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் நியூயார்க்கில் நடைபெற உள்ளது.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்தி இருந்தது.

அதேவேளையில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தனது தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவிடம் தோல்வி கண்டது. இந்நிலையில் இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று வெற்றி பயணத்தை தொடர இந்தியாவும், தனது வெற்றிக்கணக்கை தொடங்க பாகிஸ்தானும் கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்தியா – பாகிஸ்தான் ஆட்டத்துக்கு பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. இதனால் போட்டி நடைபெறும் மைதானத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இலங்கை நேரப்படி ஆட்டம் இரவு 8 மணிக்கு ஆரம்பமாகும்.

Related Articles

Latest Articles