இந்தியா பாரம்பரியம், வளர்ச்சியின் பாதையில் ஓடுகிறது: பிரதமர் மோடி

இந்தியா தனது பாரம்பரியத்தை மகத்தான சுயமரியாதையுடன் பெருமிதத்துடன் வெளிப்படுத்துகிறது, நவீனத்துவத்தை அறிமுகப்படுத்தும் அதே வேளையில் அதன் பாரம்பரியங்களை வலுப்படுத்துவோம் என்று உறுதியளிப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் தெரிவித்தார். நாட்டின் கொள்கைகள் மற்றும் முயற்சிகளில் எந்த பாகுபாடும் இல்லை என்றும், ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதை நோக்கமாகக் கொண்டது என்றும் அவர் கூறினார்.

சமூக சீர்திருத்தவாதியும், ஆர்ய சமாஜ நிறுவனருமான தயானந்த சரஸ்வதியின் 200வது பிறந்தநாளை நினைவுகூரும் கொண்டாட்டங்களைத் தொடங்கி வைத்தபோது பிரதமர் மோடி இதனைத் தெரிவித்தார்.

சுற்றுச்சூழலில் இந்தியா உலகிற்கு வழி காட்டுவதாகக் கூறிய அவர், இந்த ஆண்டு ஜி20 மாநாட்டில் இந்தியா தலைமை தாங்குவது பெருமைக்குரியது என்றும் குறிப்பிட்டார்.

“மிகப்பெரும் சுயமரியாதையுடன் கூடிய நாடு இன்று அதன் பாரம்பரியத்தின் மீது பெருமிதம் கொள்கிறது. நவீனத்துவத்தை கொண்டு வரும்போது நமது பாரம்பரியங்களை வலுப்படுத்துவோம் என்று நாடு முழு தன்னம்பிக்கையுடன் கூறுகிறது” என்று மோடி கூறினார்.

நாடு பாரம்பரியம் மற்றும் வளர்ச்சி பாதையில் இயங்குகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

கடமையின் பாதையில் நடப்பது பற்றி பேசும் போது, கடமைகளை பற்றி பேசுகிறார் ஆனால் உரிமைகள் பற்றி பேசவில்லை என்று சிலர் கூறுகிறார்கள்.

21ம் நூற்றாண்டில் எனக்கு இப்படி இருந்தால், 150 ஆண்டுகளுக்கு முன், சுவாமி தயானந்தர் சமுதாயத்திற்கு வழி காட்டுவதில் என்ன மாதிரியான சிரமங்களை எதிர்கொண்டிருப்பார் என்று கற்பனை செய்து பாருங்கள்,” என்றார்.

மகரிஷி தயானந்த சரஸ்வதி காட்டிய பாதை கோடிக்கணக்கான மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

இந்த நிகழ்வு வரலாற்று சிறப்புமிக்கது என்றும், இது மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கான உத்வேகம் என்றும் மோடி கூறினார்.

மகரிஷி தயானந்த சரஸ்வதி, இந்தியாவின் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக குரல் கொடுத்ததோடு, சமூக பாகுபாடு மற்றும் தீண்டாமைக்கு எதிராக வலுவான பிரச்சாரத்தை தொடங்கினார்.

சியாச்சினில் நிலைகொள்வது முதல் ரஃபேல் போர் விமானங்களை ஓட்டுவது வரை நாட்டின் மகள்கள் இன்று முக்கியப் பங்காற்றுகிறார்கள் என்று மோடி கூறினார்.

1824 இல் பிறந்த சரஸ்வதி, அப்போது நிலவி வந்த சமூக ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்துப் போராடினார். சமூக சீர்திருத்தங்கள் மற்றும் கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் நாட்டின் கலாச்சார மற்றும் சமூக விழிப்புணர்வில் ஆர்ய சமாஜ் முக்கியப் பங்காற்றியுள்ளது என்று பிரதமர் அலுவலகம் (PMO) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சமூக சீர்திருத்தவாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களை கொண்டாடுவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது, குறிப்பாக அவர்களின் பங்களிப்புகள் இன்னும் இந்திய அளவில் வழங்கப்படவில்லை என்று அது கூறியது.

Related Articles

Latest Articles