இந்தியா விரைவில் தன்னிறைவு பெறும் – சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி!

நாடு தன்னிறைவு பெறுவதே ஒவ்வொரு இந்தியனின் தாரக மந்திரம் என்று பிரதமர் மோடி கூறினார்.

74ஆவது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

பிரதமர் மோடி கூறியதாவது:

“அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள். நம்நாடு சுதந்திரமடைய தங்களது உயிரை தியாகம் செய்தவர்களுக்கு மனப்பூர்வ நன்றி.

நாட்டின் பல்வேறு இடங்களில் மழை, நிலச்சரிவு ஆகிய காரணங்களால் போர்க்களமாக உள்ளது.கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்களப் பணியாளர்களுக்கு நன்றி.

மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். நம் தேசத்தின் ஆத்மாவை ஒருபோதும் அழிக்க முடியாது.

போராட்டத்தில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களை மறந்து விடக்கூடாது. பன்முகத்தன்மையே நமது பலம்.

இந்திய சுதந்திர போராட்டம் உலகம் முழுவதும் ஒரு உத்வேகத்தை கொடுத்தது.பன்முகத்தன்மை கொண்ட நமது ஒற்றுமையை ஆங்கிலேயர்கள் குறைத்து மதிப்பிட்டனர்.

சுதந்திரத்திற்கான போரில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யவில்லை.இந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்கள் உலகம் முழுவதும் பிரதிபலித்தது. இந்தியாவின் ஒற்றுமை உலகுக்கே ஒரு பாடம்

கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம். சுய சார்பு இந்தியாவை நோக்கி நாடு வேகமாக முன்னேறி வருகிறது. ஒவ்வொரு இந்தியனும் சொந்தக்காலில் நிற்க கற்றுக்கொள்ள வேண்டும் நாடு தன்னிறைவு பெறுவதே ஒவ்வொரு இந்தியனின் தாரக மந்திரம்.” – என்றார்.

Related Articles

Latest Articles