இந்திய அணி 434 ஓட்டங்களால் வெற்றி!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 434 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
ராஜ்கோட்டில் கடந்த 15-ம் திகதி இந்தப் போட்டி ஆரம்பமானது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 445 ஓட்டங்கள் மற்றும் இங்கிலாந்து 319 ஓட்டங்கள் எடுத்தன. 126 ஓட்டங்கள் முன்னிலை என்ற நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. 3-ம் நாள் ஆட்டத்தை 2 விக்கெட் இழப்புக்கு 196 ஓட்டங்கள் எடுத்து நிறைவு செய்தது இந்தியா.

4-ம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி 430 ஓட்டங்கள ; எடுத்து டிக்ளேர் செய்தது.
557 ஓட்டங்கள் எடுத்தால் இந்தப் போட்டியில் வெற்றி பெறலாம் என்ற இலக்கை இங்கிலாந்து அணி விரட்டியது. எனினும், 122 ஓட்டங்களுக்குள் அவ்வணி சுருண்டனது. இதன் மூலம் 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் பெற்றுள்ள வெற்றியாக இந்தியாவுக்கு இது அமைந்துள்ளது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியை தழுவுவது இது இரண்டாவது முறை. இதற்கு முன்னர் கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அடுத்தடுத்த போட்டிகளில் அவரது தலைமையிலான இங்கிலாந்து அணி தோல்வியை தழுவி இருந்தது.

Related Articles

Latest Articles