இந்திய அரசாங்கத்தின் நிதியுதவின் கீழ் பெருந்தோட்டங்களில் அபிவிருத்தி செய்யப்படவுள்ள 9 பாடசாலைகளுக்கு 300 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வேலைத்திட்டத்தை உடனடியாக அமுல்படுத்துவது தொடர்பில் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலர் செந்தில் தொண்டமான் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையில் விசேட கலந்துரையாடலொன்று அமைச்சில் நடைபெற்றது.
இதன்போது வேலைத்திட்டத்தை உடனடியாக அமுல்படுத்துவது தொடர்பிலான விளக்கத்தை செந்தில் தொண்டமான் அதிகாரிகளுக்கு வழங்கியதுடன், அதற்கான ஆவணங்களும் தயாரிக்கப்பட்டன.
அத்துடன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே, கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் தலைமையில் வேலைத்திட்டங்களுக்கான அடிக்கல் எதிர்வரும் ஓர், இரு மாதங்களில் நாட்டப்படும் எனவும் செந்தில் தொண்டமான் அமைச்சின் அதிகாரிகளிடம் விளக்கமளித்தார்.
பெருந்தோட்டப் பகுதிகளில் இந்திய அரசாங்கம் முன்னெடுத்துவரும் சேவைகளுக்கு இதன்போது செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.