இந்திய இலுவைப்படகுகளுக்கு ஒருபோதும் இடமில்லை!

” இந்திய இலுவைப் படகுகளை ஒருவிநாடிக்கூட இலங்கை கடற்பரப்புக்குள் அனுமதிக்ககூடாது என்பதே எனது உறுதியான நிலைப்பாடாகும்.” – என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து வெளியிட்ட அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

” இந்திய இலுவை படகு தொடர்பில் உங்கள் ( நிரோஷன் பெரேரா எம்.பி.) கருத்துடன் உடன்படுகின்றேன். இழுவை படகுக்கு ஒரு விநாடிகூட அனுமதிக்ககூடாது என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு, இதனை வெளிப்படையாக சொல்லி வருகின்றேன்.

இந்தியாவில் தேர்தல் காலங்களில் கச்சத்தீவு குறித்து ஏட்டிக்குப்போட்டியான அறிவிப்புகள் வெளிவருவது வழமை. 74 கைச்சாத்திடப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தால் 80 வீதமான வளங்கொழித்த பரப்பை நாம் இந்தியாவுக்கு தாரை வார்த்துவிட்டோம்.” – என்றார்.

Related Articles

Latest Articles