இந்திய மீனவர்கள் அத்துமீறல் – யாழில் போராட்டம் (photos)

இந்திய இழுவைப் படகு எல்லை தாண்டி வருவதை தடுக்ககோரி யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண நீரியல் வளத்துறை திணைக்களத்துக்கு முன்னால் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் குருநகர் மீனவர்கள் கற்கட தீவுக்கு அருகில் மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது , இந்திய இழுவைப்படகு ஒன்று குருநகர் மீனவர்களின் படகினை மோதி சேதப்படுத்தியதுடன் , இழுவைப்படகில் வந்த இந்திய மீனவர்கள் , குருநகர் மீனவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு அவர்களை கடலில் வீசவும் முயற்சித்திருந்தனர்.

இழுவைப்படகு மோதி கடும் சேதங்களுக்கு உள்ளான தமது படகில் குருநகர் மீனவர்கள் கரை திரும்பி இருந்தனர்.

இந்நிலையிலே வடக்கு கடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை தடுக்குமாறு கோரி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Articles

Latest Articles