இந்திய மீனவர்கள் 14 பேர் இன்று அதிகாலை கைது!

இலங்கையின் நெடுந்தீவு கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த 14 இந்திய மீனவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

14 இந்திய மீனவர்களும் இரண்டு ட்ரோளர் படகுகளில் இழுவை மடியில் ஈடுபட்ட சமயம் கைது செய்யப்பட்டமையோடு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை தளத்துக்கு  அழைத்து வரப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles