ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சருடன் பேச்சு நடத்தியுள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் 5 நாட்கள் சுற்றுப்பயணமாக ரஷியாவுக்கு சென்றார். மாஸ்கோ சென்றடைந்த அவருக்கு அந்நாட்டின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை சந்தித்தார். அப்போது இருதரப்பு விவகாரங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இரு நாடுகளின் உறவுகள், குறிப்பாக வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு ஆகிய துறைகளில் இரு நாட்டு அமைச்சர்களும் கலந்துரையாடியுள்ளனர்.