இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டு பூரணப்படுத்தப்படாத வீடுகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கையளிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இதன் ஒருகட்டமாக டிக்கோயா போர்டைஸ் , பொகவந்தலாவ போகவான மற்றும் லின்ஸ்டெட் பிரிவுகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 240 வீடுகளுக்கு குடிநீர் , மின்சார மற்றும் ,பாதை வசதிகள் உள்ளடங்கலான உட்கட்டமைப்பு வசதிகளைப் பூர்த்தி செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அமைச்சர் ஜீவன் தொண்டமானின் அமைச்சின் மூலம் நிதி ஒதுக்கப்பட்டு இந்தப் பணிகள் முழுமைபடுத்தப்பட்டு பொதுமக்களுக்கு கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செயற்திட்டத்தை நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதப்பாண்டி ராமேஸ்வரன் , நோர்வூட் பிரதேசசபை தலைவர் ரவி குழந்தைவேல் , அமைச்சரின் பிரத்தியேக உதவியாளர் தயாளன், அமைச்சின் அதிகாரி ரூபதர்சன் , நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர்கள் இ தொ கா பொகவந்தலாவ அமைப்பாளர்கள் , மாவட்ட தலைவர்கள் , தோட்ட தலைவர் , தலைவிகள் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டனர்.