இந்திய வெளிவிவகார அமைச்சர் ரஷ்யா பயணம்!

 

எதிர்வரும் ஆகஸ்ட் 21-ம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய் சங்கர் ரஷ்யா செல்கின்றார்.

இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இதனால் இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்​நிலை​யில் தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவல் ரஷ்​யா​வுக்கு சென்​றிருந்​தார். அங்கு ஜனாதிபதி புடினை சந்​தித்​துப் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார்.

இந்த சந்​திப்​புக்​குப் பிறகு அஜித் தோவல் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “ரஷ்ய ஜனாதிபதி புடின் இந்​தி​யா​வுக்கு வர விருப்​பம் தெரி​வித்​துள்​ளார். இது மகிழ்ச்சி அளிப்​ப​தாக உள்​ளது’’ என்றார்.

இந்​நிலை​யில், வரும் 21-ம் திகதி மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சர் எஸ்​.ஜெய்​சங்​கர் ரஷ்​யா​வுக்கு செல்ல திட்​ட​மிட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. அங்கு அந்​நாட்டு வெளி​யுறவு அமைச்​சர் செர்கே லாவ்​ரோவை சந்​தித்​துப் பேச உள்​ள​தாக கூறப்​படு​கிறது.

Related Articles

Latest Articles