‘இந்துக்களின் மரபுரிமைகளை அழிக்கமாட்டோம்’

இந்துக்களின் மரபுரிமைகளை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்து மக்களின் உரிமைகளை நாம் ஒருபோதும் பறிக்கமாட்டோம். இந்நாட்டிலுள்ள அனைத்து மதங்களினதும் தொல்லியல் பெறுமதிமிக்க அடையாளங்கள் பாதுக்காக்கப்படும் – என்று தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று வவுனியா ஆதிசிவன் கோவில் விவகாரம் தொடர்பில் சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

குறித்த கோவில் விவகாரம் தொடர்பில் வழக்கு நடைபெற்றுவருகின்றது. எனவே, நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்த பின்னரே வழிபாட்டுக்கு அனுமதிப்பதா அல்லது என்னசெய்வதென முடிவெடுக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.
” இலங்கையில் ஆரம்பகாலகட்டத்தில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்துள்ளனர். வரலாற்று நூல்களில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, பௌத்த அடையாளங்களை வைத்துக்கொண்டு, இது சிங்களவர்களுக்குரியது என ஆக்கிரமிப்பு செய்யக்கூடாதென” சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. சுட்டிக்காட்டினார்.

Related Articles

Latest Articles