இந்து சமுத்திர சம்மேளனத்தின் ஆரம்ப மாநாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உரையாற்றவுள்ளார் அமைச்சர் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” இந்து சமுத்திர சம்மேளன மாநாடு ஐக்கிய அரசு இராஜ்ஜியத்தின் தலைநகரான அபுதாபியில் டிசம்பர் 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 47 நாடுகள் பங்கேற்கும் இம்மாநாட்டில் ஆரம்ப உரையை நிகழ்த்துமாறு எமது ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் 4 ஆம் திகதி மாநாட்டில் உரையாற்றுவார். ” – என்றும் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் குறிப்பிட்டார்.