இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்குமாறு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

5ஆவது இந்து சமுத்திர மாநாடு எதிர்வரும் டிசம்பர் 3 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதிவரை அபுதாபியில் நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டில் பங்கேற்பதற்கே ரணிலுக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.மாநாட்டில் பங்கேற்கும் ரணில் விக்கிரமசிங்க டிசம்பர் 5 ஆம் திகதி உரையாற்றுவார்.
2016 -2019 காலப்பகுதியில் குறித்த மாநாட்டின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
