புசல்லாவை இந்து தேசியக் கல்லூரி, பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “இந்து பிரீமியர் லீக்” மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுபோட்டி நாளை (19) காலை 7.30 மணிக்கு பாடசாலை மைதானத்தில் ஆரம்பமாகின்றது.
17, 18 மற்றும் 19 ஆம் திகதிகள்வரை போட்டிகள் நடைபெறும்.
இந்து பிரீமியர் லீக்கில் 25 அணிகள் பங்கேற்கவுள்ளன. அவை ஏழு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் மூன்று ஆட்டங்களில் விளையாட வேண்டும்.
40 லீக் சுற்று போட்டிகளும், நொக்அவுட் முறையில் 7 போட்டிகளும் நடைபெறும்.
இந்து தேசிய கல்லூரியில் 1996 ஆம் ஆண்டில் சாதார தரப்பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் முதல் 2020 ஆம் ஆண்டு பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள்வரை, பழைய மாணவர்கள் அணிகளாக போட்டி தொடரில் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.
பழைய மாணவர்களின் ஒன்றுகூடல், பாடசாலை அபிவிருத்திக்கு அவர்களின் பங்களிப்பு உள்ளிட்ட காரணங்களைக்கருதியே பழைய மாணவர் சங்கத்தினரால் நட்பு ரீதியில் கிரிக்கெட் போட்டி தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.